TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 15 , 2024 285 days 369 0
  • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமான மெத்தனால் கலந்த அரக்கு குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி B.கோகுல்தாஸ் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஆனது, சம்பவம் குறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கண்ணோட்டங்கள், கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
  • திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் மற்றும் டாடா IIS ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் மூலம் மும்பையின் இந்திய திறன்கள் கல்வி நிறுவனம் (IIS) ஆனது நிறுவப்பட்டுள்ளது.
  • தேசிய மின் ஆளுகைப் பிரிவு (NeGD) ஆனது, சமீபத்தில் UMANG என்ற செயலியை இந்தியாவின் எண்ணிம ஆவணக் காப்புச் செயலியான டிஜி லாக்கர் செயலியுடன் ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது.
  • 31 MQ-9B அதிக உயரத்தில் அதிக நேரச் செயல்பாட்டு திறன் (HALE) கொண்ட ஆளில்லா வான்வழி வாகனங்களை (UAV) அமெரிக்காவிடமிருந்து வாங்கச் செய்வதற்கான ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, ஒளியிழை மற்றும் ஒளியியல் நுட்பத்தினைப் பயன்படுத்தி மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டு அறிவதற்கான கருவியை மலிவு விலையில் உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்