முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவாக கும்பகோணத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசானது, குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகும் 500 விண்ணப்ப தாரர்கள் தங்கிப் பயிற்சி பெறும் வகையில் சென்னையின் ஷெனாய் நகரில் ஒரு உறைவிடப் பயிற்சி மையத்தினை நிறுவ உள்ளது.
தமிழக மாநில அரசின் நிதித் துறையானது, தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும் (Tamilar Nidhi Nirvakam: Thonmaiyum Thodarchiyum) என்ற ஒரு இதழினைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
காரியா தெய்வத்தை கௌரவிக்கும் ஒரு சமய விழாவான காரியா பூஜை திரிபுராவில் கொண்டாடப்படுகிறது.
அயர்லாந்தின் கார்லோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கஜ் அத்வானியை வீழ்த்தி, இந்தியாவின் சௌரவ் கோத்தாரி 2025 ஆம் ஆண்டு IBSF உலக பில்லியர்ட்ஸ் பட்டத்தினை வென்றுள்ளார்.