TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 27 , 2025 3 days 22 0
  • முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவாக கும்பகோணத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு அரசானது, குடிமைப் பணிகள் தேர்வுக்குத் தயாராகும் 500 விண்ணப்ப தாரர்கள் தங்கிப் பயிற்சி பெறும் வகையில் சென்னையின் ஷெனாய் நகரில் ஒரு உறைவிடப் பயிற்சி மையத்தினை நிறுவ உள்ளது.
  • தமிழக மாநில அரசின் நிதித் துறையானது, தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும் (Tamilar Nidhi Nirvakam: Thonmaiyum Thodarchiyum) என்ற ஒரு இதழினைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
  • காரியா தெய்வத்தை கௌரவிக்கும் ஒரு சமய விழாவான காரியா பூஜை திரிபுராவில் கொண்டாடப்படுகிறது.
  • அயர்லாந்தின் கார்லோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்கஜ் அத்வானியை வீழ்த்தி, இந்தியாவின் சௌரவ் கோத்தாரி 2025 ஆம் ஆண்டு IBSF உலக பில்லியர்ட்ஸ் பட்டத்தினை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்