TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 30 , 2025 17 hrs 0 min 13 0
  • கடந்த நிதியாண்டில் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, 100க்கும் மேற்பட்ட உள்ளார்ந்தத் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை வழி நடத்தி மேம்படுத்தியுள்ளது.
    • கடந்த 12 ஆண்டுகளில், இந்தக் கழகத்தின் தொழில்நுட்பக் காப்பகப் பிரிவு ஆனது, ஒட்டு மொத்தமாக 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான 457 உள்ளார்ந்தத் தொழில் நுட்பம் சார் புத்தொழில் நிறுவனங்களை ஆதரித்துள்ளது.
  • கும்பகோணத்தில் அமைக்கப்பட உள்ள கலைஞர் பல்கலைக்கழகத்தின் வேந்தராக தமிழக முதல்வரையும், மாநில உயர்கல்வி அமைச்சரை அதன் துணைவேந்தராகவும் நியமிக்கும் தமிழக அரசு மசோதாவை முன்மொழிந்துள்ளது.
  • சர்வதேச நாடக நிறுவனம் (ITI) ஆனது, உலகளவில் பல்வேறு வகையான நடனங்களை ஊக்குவிப்பதற்காக 1982 ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 29 ஆம் தேதியினைச் சர்வதேச நடன தினமாக அனுசரித்து வருகிறது.
  • யுனெஸ்கோ மற்றும் இதர பிற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஜாஸ் தினம் ஆனது ஏப்ரல் 30 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது என்ற ஒரு நிலைமையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரானது இந்த ஆண்டிற்கான இத்தினக் கொண்டாட்டத்தினை ஏற்பாடு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்