TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 8 , 2025 17 hrs 0 min 22 0
  • மறைந்த ‘கவிக்கோ’ S. அப்துல் ரஹ்மான், மறைந்த மெர்வின், மறைந்த A. பழனி, மற்றும் கவிஞர்கள் கொ. மா. கோதண்டம் மற்றும் இளமா தமிழ்நாவன் ஆகிய ஐந்து முக்கியத் தமிழ் அறிஞர்களின் இலக்கியப் படைப்புகள் தமிழக அரசால் சமீபத்தில் தேசியமயமாக்கப் பட்டு, அதற்கு உண்டான காப்பு உரிமத் தொகைகள் அவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப் பட்டன.
  • சென்னையில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தின் நுழைவாயிலில் உலகெங்கிலும் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக இயக்கங்களில் தாக்கங்களை ஏற்படுத்திய ஜெர்மனி நாட்டின் பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல் கோட்பாட்டாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிலையானது நிறுவப்பட உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளானது முதல் முறையாக பீகாரில் நடைபெற்று வருகிறது.
  • கேரளாவைச் சேர்ந்த கோழிக்கோடு நகரானது சமீபத்தில் உலக சுகாதார அமைப்பின் முதியோரின் தேவைகளை உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்ட நகரங்கள் மற்றும் சமூகங்களின் உலகளாவிய வலையமைப்பில் (GNAFCC) சேர்க்கப்பட்டுள்ளது.
  • ஐதராபாத்தில் உள்ள 'கோல்ட்சிக்கா' நிறுவனமானது பயனர்கள் தங்கம் மற்றும் தங்க நகைகளை வாங்க, விற்க, பரிமாற்ற, குத்தகைக்கு விடுவதற்கு, எண்ணிமமயமாக்க மற்றும் பணமாக்குவதற்கான ஒரு திறனை வழங்கும் செயற்கை நுண்ணறிவினால் இயங்கும் தங்க உருக்கு ATM இயந்திரத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஐதராபாத் நகரானது 72வது உலக அழகிப் போட்டியை நடத்த உள்ளது.
  • இந்திய இராணுவமானது, இரண்டு மாத கால அமர்நாத் யாத்திரைக்குப் பாதுகாப்பை வழங்குவதற்காக சிவா நடவடிக்கையினை (Operation Shiva) ஜம்மு மற்றும் காஷ்மீரில் தொடங்குகிறது.
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT) மற்றும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM) ஆகியவற்றின் மாதிரியின் அடிப்படையில், மும்பையில் இந்தியப் படைப்பாக்கத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (IICT) நிறுவப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ், 21 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று மூன்று ஆண்டு பதவிக் காலத்தினை வகிக்கவுள்ள முதல் பிரதமர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் மக்கள் செயல் கட்சி (PAP) ஆனது பொதுத் தேர்தலில் 97 பாராளுமன்ற இடங்களில் 87 இடங்களைப் பிடித்து அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.
  • அங்கோலா நாடானது, சர்வதேச சூரிய சக்திக் கூட்டணி (ISA) கட்டமைப்பு மீதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதுடன் ISA கூட்டணியின் 123வது உறுப்பினராக மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்