தமிழ்நாடு அமைச்சரவையானது, சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டு, அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறையும், முன்னதாக அவர் கொண்டிருந்த கனிமங்கள் மற்றும் சுரங்கத்துறை S. ரகுபதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் அவசரகால தயார்நிலையை மேம்படுத்தச் செய்வதற்காக 'அபியாஸ் நடவடிக்கை' என்ற பெயரில் மிகப்பெரிய அளவிலான குடிமைப் பாதுகாப்பு மாதிரியான ஒரு போர் ஒத்திகையானது நாடு முழுவதும் நடத்தப் பட்டது.
அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, இந்த மராட்டிய இராணியின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு பிரமாண்டமான வரலாற்றுத் திரைப்படத்தினை தயாரிக்க உள்ளதாக மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.
"Reaching New Worlds: A Space Exploration Renaissance" என்ற கருத்துருவின் கீழ் 12வது உலகளாவிய விண்வெளி ஆய்வு மாநாட்டினை (GLEX 2025) இந்தியா நடத்தியது.
மத்தியப் புலனாய்வுப் பிரிவின் (CBI) இயக்குனர் பிரவீன் சூட்டின் பதவிக் காலம் என்பதை மத்திய அரசானது து ஓராண்டிற்கு நீட்டித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் உலக வர்த்தக மையத்தில் 11வது மத்தியக் கிழக்கு கடல் வணிக கடல்சார் தளவாடங்கள் (SMLME) மாநாடு நடத்தப் பட்டது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டு ஆசிய - சர்வதேச கடல்சார் பாதுகாப்புக் கண்காட்சியில் (IMDEX) இந்தியா, அமெரிக்கா மற்றும் 13 நாடுகள் பங்கேற்கின்றன.
சமூக சேவகர் மற்றும் தொழில்முனைவோரான டாக்டர் முஸ்தபா யூசுபலி கோம் என்பவருக்குச் சமீபத்தில் மதிப்புமிக்க 2025 ஆம் ஆண்டு சர்வதேசப் புத்த அமைதி விருது அளிக்கப் பட்டது.
மக்கள், மிகவும் குறிப்பாக இளையோர்கள், விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் மே 07 ஆம் தேதியன்று உலகத் தடகளத் தினமானது கொண்டாடப்படுகிறது.