TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 12 , 2025 17 hrs 0 min 21 0
  • தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் S. சாதிக்கிற்கு கல்விக்கோ விருதை வழங்கினார்.
  • லியோ XIV என்ற பெயரில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப்பாண்டவரான  இராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட், 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பொள்ளாச்சியில் உள்ள செண்பகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்திருந்தார்.
  • தமிழக மாநில அரசினால் திருநெல்வேலியில் நிறுவப்படவுள்ள ஒரு பிரம்மாண்டமான நூலகத்திற்கு இந்திய முஸ்லிம் லீக் (IUML) ஒன்றியத்தின் தலைவர் காயித்-இ-மில்லத் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
  • மேம்படுத்தப் பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பிரிவான திருச்சியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையானது, 92 டிரைகா (திருச்சி கார்பைன்) துப்பாக்கிகளின் முதல் தொகுப்பை கேரள காவல்துறையிடம் ஒப்படைத்து உள்ளது.
  • தமிழக அரசானது, பொது சொத்துக்களைக் கட்டமைப்பதில் மக்களின் பங்களிப்பை ஊக்குவிப்பதை முக்கிய பெரும் நோக்கமாகக் கொண்ட நமக்கு நாமே திட்டத்தினை செயல்படுத்துவதற்காக 150 கோடி ரூபாய்க்கு நிர்வாக ரீதியான ஒப்புதலை அளித்து உள்ளது.
  • இஸ்லாமிய இலக்கியச் சங்கம் (ILS) ஆனது, திருச்சியில் மூன்று நாட்கள் அளவிலான மாநாட்டினை ஏற்பாடு செய்து அதன் பொன் விழாவைக் கொண்டாடியது.
  • இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) ஆனது பெண்கள் மற்றும் சிறுமிகள் போட்டிகளில் திருநர்கள் பங்கேற்பதற்கான தடையை உடனடியாக அங்கு நடைமுறைக்கு வரும் வகையில் அறிவித்துள்ளது.
  • சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லைகளில் மிஷன் சங்கல்ப் எனப்படும் ஒரு மாபெரும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையானது சமீபத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனம் உருவாக்கிய துருவ் எனப் படும் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டரின் (ALH) இராணுவ மற்றும் விமானப்படை பயன்பாட்டு வடிவங்களை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கு என்று அதிகாரப் பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன.
  • இந்தியக் கடற்படையானது, 'அர்னாலா' என்று பெயரிடப்பட்டுள்ள, குறைவான ஆழம் கொண்ட பகுதிகளில் இயங்கும் அதன் முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களைப் (ASW SWC) பெற்றுள்ளது.
  • நவீனத் தொழில்நுட்பம் மற்றும் புதிய விதை வகைகள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என மத்திய அரசானது, 'விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்' என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தினைத் தொடங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்