2024-2025 ஆண்டில் தமிழ்நாட்டில் சுமார் 56% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன என்ற நிலையில் இதில் சுமார் 83% பிரசவங்கள் ஒரு விரிவான அவசர மகப்பேறியல் மற்றும் பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு (CEmONC) மையங்களில் நடைபெற்றன.
தமிழ்நாடு 99.9% என்ற அளவில் (8.02 லட்சம்) மருத்துவமனைப் பிரசவங்களை மேற் கொள்கிறது என்பதோடு இந்த மாநிலத்தின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் என்பது 2024-25 காலக்கட்டத்தில் 1,00,000 பிறப்புகளுக்கு 39 ஆக உள்ளது
பூடான் நாடானது, Binance Pay மற்றும் DK வங்கியுடன் இணைந்து உலகின் முதல் தேசிய அளவிலான இணையச் சங்கேதப் பணம் சார் சுற்றுலா கட்டண முறையை அறிமுகப் படுத்தியது.
நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் வனத்துறை மன்றத்தின் (UNFF20) 20வது அமர்வில், வனங்களின் வளங்காப்பு மற்றும் நிலையான வன மேலாண்மைக்கான அதன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இந்தியா எடுத்துரைத்து உள்ளது.