TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 15 , 2025 19 hrs 0 min 15 0
  • தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) நிர்வாகத் தலைவராக உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்தினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார்.
  • சர்வம் எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார் இந்தியப் புத்தொழில் நிறுவனமானது, சுமார் 11 இந்திய மொழிகளில் சேவை வழங்கும் உரையினை வாய்மொழியாக மொழி பெயர்க்கும் (TTS) புல்புல்-V2 என்ற அதன் சமீபத்திய செயற்கை நுண்ணறிவு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியாவின் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பைப் போட்டியின் இரண்டாவது நிலையில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • புது டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை ஆதரவு வழங்கீட்டு மருத்துவமனையின் கண் சிகிச்சை மருத்துவத் துறையானது, கிளாக்கோமா (கண் நீர் அழுத்த நோய்) பாதிப்பிற்கான குறைந்தபட்ச ஊடுருவும் அறுவைச் சிகிச்சைக்கான முப்பரிமாண நுண்ணோக்கியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • ஜெர்மனி நாட்டின் கெஹ்ல் மற்றும் பிராங்பேர்ட் இடையே அமைந்துள்ள வழக்கமான தொலைத்தொடர்பு வலையமைப்பில் 250 கிலோமீட்டர் தூரத்திற்கு குவாண்டம் வடிவ செய்திகளை ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக கடத்தியுள்ளனர்.
  • தாலிபான் அரசாங்கமானது, இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக கருதப் படும் சூதாட்டத்துடன் சதுரங்க விளையாட்டு இணைக்கப் படலாம் என்ற ஒரு பெரும் அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டிற்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை அறிவித்துள்ளது.
  • இலங்கை நாட்டின் கொழும்புவில் நடைபெற்ற பிராந்திய ஒருங்கிணைந்த பல்-இடர் முன்னெச்சரிக்கை அமைப்பின் (RIMES) 4வது அமைச்சர்கள் மாநாட்டிற்கு இந்தியா இணைத் தலைமைப் பொறுப்பினை வகித்தது.
    • பேரிடர் தயார்நிலையில் பிராந்திய ஒத்துழைப்பை மிகவும் நன்கு வலுப்படுத்தும் பிரகடனத்தினை இந்த நிகழ்வானது ஒரு மனதாக ஏற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்