6G தொழில்நுட்பங்களுக்கான காப்புரிமையைத் தாக்கல் செய்வதில் முன்னிலையில் உள்ள ஆறு நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
2024-25 ஆம் ஆண்டில் எத்தனால் உற்பத்திக்காக இந்திய உணவுக் கழகத்தின் (FCI) 2.8 மில்லியன் டன்கள் (மொத்தம் 5.2 மில்லியன் டன்கள்) அரிசியை மேலும் கூடுதலாக வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்குப் பிராந்திய இராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு எதிராக காஷ்மீரில் ஆபரேஷன் கெல்லர் என்ற மற்றொரு இராணுவ நடவடிக்கையை இந்திய இராணுவம் தொடங்கியுள்ளது.
சீனாவின் மாபெரும் மண்டலம் மற்றும் சாலை உள்கட்டமைப்பு என்ற முன்னெடுப்பில் இணைவதற்கு கொலம்பியா நாடானது அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளது.
அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் வெள்ளை மாளிகையினால் வரலாற்றில் மிகப் பெரியது என்று அழைக்கப்படுகின்ற சுமார் 142 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு பெரிய ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஆண்டு சர்வதேசக் குடும்ப தினமானது, மே 15 ஆம் தேதியன்று "Family-Oriented Policies for Sustainable Development: Towards the Second World Summit for Social Development" என்ற கருத்துருவின் கீழ் கொண்டாடப் பட்டது.