இந்தியக் குடியரசுத் தலைவர் 58வது ஞானபீட விருதை (2023) சமஸ்கிருத மொழி அறிஞர் ஜகத்குரு இராமபத்ராச்சாரியார் ஜிக்கு வழங்கினார்.
EOS-9 கண்காணிப்புச் செயற்கைக் கோளினை விண் சுற்றுப்பாதையில் உட்செலுத்தச் செய்வதற்காக இஸ்ரோவினால் மேற்கொள்ளப்பட்ட PSLV ஏவுகலத்தின் 63வது ஏவுதல் செயல்பாட்டில் அதன் நான்கு நிலைகளில் மூன்றாவது நிலை தோல்வியடைந்ததன் காரணமாக வெற்றி பெறவில்லை.
வணிக அளவிலான உலகின் முதல் மின்னணு மெத்தனால் உற்பத்தி ஆலையானது டென்மார்க்கில் செயல்படத் தொடங்கியது.
உலக சுகாதார அமைப்பானது, பப்புவா நியூ கினியாவில் போலியோ தொற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அறிவித்து, உடனடி தடுப்பூசி வழங்கீட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.