TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 25 , 2025 20 days 114 0
  • தமிழ்நாடு முதலமைச்சர், பரங்கிமலை/செயிண்ட் தாமஸ் மௌண்ட், ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மூன்று புதிதான 'தோழி' பணி புரியும் மகளிருக்கான விடுதிகளைத் திறந்து வைத்தார்.
  • பஹார் தத் மற்றும் விஜய் பேடி ஆகியோர் இயக்கிய 'Saving the Bhimanama: Ayushi Jain and a Giant Turtle' என்ற ஆவணப்படமானது சமீபத்தில் 15வது தாதாசாகேப் பால்கே திரைப் பட விருது விழாவில் (2025) சிறந்த ஆவணப்படத்திற்கான விருதைப் பெற்றது.
  • 78வது உலக சுகாதார சபையானது, சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 'One World for Health' என்ற கருத்துருவின் கீழ் நடத்தப் படுகிறது.
  • உலகளவில் அமைதி மற்றும் நிலையான மேம்பாட்டினை வளர்ப்பதில் கலாச்சாரச் செழுமை மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையேயான தொடர்பின் / பேச்சுவார்த்தை மூலம் முக்கியப் பங்கைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் மே 21 ஆம் தேதி அன்று உலகப் பேச்சுவார்த்தை மற்றும் மேம்பாட்டிற்கான கலாச்சாரப் பன்முகத் தன்மை தினம் அனுசரிக்க ப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்