TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 30 , 2025 10 days 74 0
  • பெங்களூரைச் சேர்ந்த கார் பந்தய வீரர் குஷ் மைனி, மொனாக்கோ கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ஃபார்முலா 2 வெற்றியைப் பெற்று ஒரு வரலாற்றைப் படைத்துள்ளார்.
  • இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) ஆனது, 24 மணி நேரத்தில் அதிகமான ஆயுள் காப்பீடுகளை (588,107) விற்றதற்காக கின்னஸ் உலகச் சாதனைப் பட்டத்தைப் பெற்று ள்ளது.
  • இரயில் பாதைகளை 100% மின்மயமாக்கும் ஒரு நிலையை அடைந்த 24வது மாநிலம் / ஒன்றியப் பிரதேசமாக குஜராத் மாறியுள்ளது.
  • புது டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் அமைப்பின் பத்தாவது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை தாங்கினார்.
  • கிரீன்கோ, அதானி கிரீன் மற்றும் JSW எனர்ஜி ஆகியவற்றின் உதவியுடன் 2032 ஆம் ஆண்டிற்குள் சுமார் 51.24 GW திறன் கொண்ட நீரேற்றுப் புனல் மின்னாற்றல் திறனை உருவாக்குவதற்கு என இந்தியா திட்டமிட்டுள்ளதாக மத்திய மின்சார ஆணையம் (CEA) தெரிவித்துள்ளது.
  • 9வது பிரிக்ஸ் தொழில் துறை அமைச்சர்கள் கூட்டம் ஆனது பிரேசிலின் பிரேசிலியா நகரில் "Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance" என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
  • 2025 ஆம் ஆண்டு உலக ஹைட்ரஜன் உச்சி மாநாடு ஆனது நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடைபெற்றது.
  • இந்தியாவானது பிரான்ஸ் மற்றும் கோஸ்டாரிகாவுடன் இணைந்து “Blue Talks” எனப் படும் இரண்டாவது கடல் சார் பேச்சுவார்த்தையை புது டெல்லியில் நடத்தியது.
  • மூன்றாவது ஐக்கிய நாடுகளின் பெருங்கடல் மாநாடு (UNOC3) ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரான்சின் நைஸ் எனுமிடத்தில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்