இந்திய இரயில்வே நிர்வாகம் மற்றும் உத்தரப் பிரதேச மாநில அரசு ஆகியவை இணைந்து, கட்டார்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்திற்கும் துத்வா புலிகள் வளங் காப்பகத்திற்கும் இடையில் இந்தியாவின் முதல் சுற்றுலாப் பயணிகளுக்குப் பரந்த காட்சியினை வழங்கும் விஸ்டாடோம் ஜங்கிள் சஃபாரி இரயிலை அறிமுகப்படுத்தி உள்ளன.
கூகுள் நிறுவனமானது, சமீபத்தில் அதன் அனைத்து தளங்கள் மற்றும் சேவைகளிலும் அடிப்படை செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை ஒருங்கிணைக்கும் "மத்ரியோஷ்கா" AI உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அல்ஜீரியா நாடானது, BRICS நாடுகளின் புதிய மேம்பாட்டு வங்கியின் (NDB) புதியதொரு உறுப்பினர் நாடாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் பெண்களின் ஆரோக்கியத்திற்காக என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சர்வதேச தினம் ஆனது 2025 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதியன்று கொண்டாடப் படுவதோடு, இது பெண்கள் மற்றும் சிறுமிகளின் ஆரோக்கியம் ஆனது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையானது என்பதை நினைவூட்டுகின்றது.
2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "In Solidarity We Resist: Our Fight, Our Right!" என்பதாகும்.
1953 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தின் டென்சிங் நோர்கே ஷெர்பா ஆகியோர் முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் மிகவும் வெற்றிகரமாக ஏறியதை நன்கு நினைவு கூரும் வகையில் மே 29 ஆம் தேதி சர்வதேச எவரெஸ்ட் தினம் அனுசரிக்கப்படுகிறது.
செரிமான ஆரோக்கியம் மற்றும் ஒட்டு மொத்த நல்வாழ்வில் அதன் தாக்கம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகச் செரிமான சுகாதார தினம் (WDHD) ஆண்டுதோறும் மே 29 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Your Digestive Health: Nourish to Flourish" என்பது ஆகும்.