TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 11 , 2025 2 days 37 0
  • விமானப்படையின் படைத் தலைவர் மனிஷா, இந்தியாவில் (மிசோரம்) ஆளுநருக்கு ஒரு உதவியாளராக (ADC) நியமிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மகளிர் இந்திய ஆயுதப் படை அதிகாரி ஆனார்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், 2.5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான தங்க நகைக் கடன்களுக்கான கடன்-மதிப்பு (LTV) விகித வரம்பானது 75 சதவீதத்திலிருந்து 85% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது Ikigai Law மற்றும் IndiaAI திட்டத்துடன் இணைந்து, யுனெஸ்கோ அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய அலுவலகம் ஆனது, செயற்கை நுண்ணறிவு தயார்நிலை மதிப்பீட்டு முறை (RAM) குறித்த ஐந்தாவது மற்றும் இறுதி பங்குதாரர் ஆலோசனையை நடத்தியது.
  • எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனமானது, Eutelsat OneWeb மற்றும் Jio Satellite Communications ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக நமது நாட்டில் செயற்கைக்கோள் வழி வகையிலான இணையதளச் சேவைகளை வழங்குவதற்காக தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து உரிமத்தைப் பெற்றுள்ள மூன்றாவது நிறுவனமாக மாறியுள்ளது.
  • நீடித்த மற்றும் நிலையான திட்டங்களுக்கு நிதியளிப்பதை எளிதாக்குவதற்கும் SDG இலக்குகளுக்கான இடைவெளியைக் குறைப்பதற்கும், சமூக, நிலைத்தன்மை மற்றும் நிலைத்தன்மையுடன் இணைக்கப்பட்ட பத்திரங்கள் உள்ளிட்ட சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) கடன் பத்திரங்களுக்கான செயல்பாட்டுக் கட்டமைப்பை SEBI அறிமுகப்படுத்தியுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு பஹ்ரைன், கொலம்பியா, ஜனநாயகக் காங்கோ குடியரசு, லாத்வியா மற்றும் லைபீரியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாகப் செயலாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • வங்காளதேசத்தின் இடைக்கால அரசாங்கமானது, 2022 ஆம் ஆண்டு சட்டத்தினை மாற்றியமைத்து, ஷேக் முஜிபுர் ரஹ்மானை 'தேசத்தின் தந்தை' என்று குறிப்பிடுவதை நீக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்