TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 16 , 2025 17 hrs 0 min 26 0
  • ஜெனீவா நகரில் உள்ள உள்நாட்டுப் புலம்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் (IDMC) அறிக்கையின்படி வெள்ளம், புயல்கள் மற்றும் பிற பேரிடர்கள் காரணமாக 2024 ஆம் ஆண்டில், இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகபட்சமாக 5.4 மில்லியன் புலம் பெயர்வுகள் பதிவாகியுள்ளது.
  • டெல்லி அரசாங்கமானது வடமேற்கு டெல்லியில் உள்ள ஹோலம்பி கலன் என்னும் ஒரு இடத்தில் இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைந்த மின்னணுக் கழிவுச் சுத்திகரிப்புப் பூங்காவை உருவாக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.
  • மத்திய அமெரிக்காவின் கௌத்திமாலாவில் உள்ள அதிகளவில் செயல்பாட்டில் உள்ள 'வோல்கன் டி ஃபியூகோ' எரிமலை சமீபத்தில் வெடித்தது.
  • 2026 ஆம் ஆண்டினைச் சர்வதேச மகளிர் விவசாயி ஆண்டாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்