கொல்லிமலை காபி மற்றும் கொல்லிமலை பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடுகள் (GI) கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளது.
சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் என்ற ஒரு நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் வேளாண்சார் ஆளில்லா விமான உள்நாட்டுமயமாக்கல் மையம் ஆனது திறக்கப் பட்டுள்ளது.
துணை படைத் தளபதியான யஷஸ்வி சோலங்கி இந்தியக் குடியரசுத் தலைவரின் மெய்க்காப்பாளராக (ADC) நியமிக்கப்பட்டதன் மூலம் இந்தப் பதவியை வகிக்கும் இந்தியக் கடற்படையினைச் சேர்ந்த முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இந்திய விமானப்படை மற்றும் அமெரிக்க விமானப் படையானது உத்தரப் பிரதேச மாநிலத்தின் சந்தினகரில் முதல் முறையாக "Tiger Claw" எனப்படும் ஒரு கூட்டுச் சிறப்பு நடவடிக்கைப் பயிற்சியினை நடத்தின.
இந்தியாவிற்கும் பிரான்சுக்கும் இடையிலான 8வது சக்தி - 2025 எனும் கூட்டு ராணுவப் பயிற்சியானது பிரான்சில் நடைபெற உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியானது, லண்டனில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் ICC பட்டத்தினை வென்றுள்ளது.