தாய்லாந்தின் லம்பாங் என்னுமிடத்தில் உள்ள தாய் யானை வளங்காப்பு மையத்தில் (TECC) பயிற்சி பெறுவதற்காக வேண்டி தமிழ்நாடு அரசானது தமிழக வனத்துறைப் பணியாளர்கள், யானைப் பாகன்கள் மற்றும் யானைக் காவலர்கள் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அரசானது, புதிய விரிவான மினி-பேருந்து சேவைத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளது என்பதோடு இது தமிழகத்தில் 25,708 கிலோ மீட்டர் தூரத்திலான பேருந்து சேவை வழங்கப் படாத பகுதிகளுக்குப் பேருந்துச் சேவைகளை விரிவுபடுத்துகிறது.
பிராந்திய ரீதியாக சேரா என வெகுவாக அழைக்கப்படும் இந்தியச் சாரைப் பாம்பு (தியாஸ் முயூகோஷா) ஆனது கேரள மாநிலத்தின் அதிகாரப்பூர்வ ஊர்வன இனமாக அறிவிக்கப் பட உள்ளது.
எதிரிகளின் உட்புறப் பகுதி தாக்குதல்களுக்காக என வடிவமைக்கப்பட்ட செங்குத்துக் கோணங்களில் பெருமளவு மேலெழும்பும் மற்றும் தரையிறங்கும் வகையிலான (VTOL) ருத்ராஸ்திரா எனும் ஆளில்லா வான்வழி வாகனத்தின் (UAV) சோதனைகளை இந்திய இராணுவம் வெற்றிகரமாக மேற்கொண்டது.
இலண்டன் மற்றும் டப்ளின் போன்ற உலகளாவிய மையங்களை விஞ்சி, மிகப்பெரும் கட்டுமானத்தில் உள்ள தரவு மையத் திறனில் மும்பை உலகளவில் 6வது இடத்தில் உள்ளது.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலிருந்து ஏற்றுமதி செய்யப் படுகின்ற முதலாவது ஆல்கஹால் வகையாக மேகாலயாவின் சிரபுஞ்சி ஈஸ்டர்ன் கிராஃப்ட் வகை ஜின் மாறி உள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் தந்தையர் தினமானது கொண்டாடப்படுகிறது என்ற நிலையில் இந்த ஆண்டு இத்தினம் ஜூன் 15 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.