TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 21 , 2025 14 days 40 0
  • தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறையானது, அரசு மருத்துவமனைகளில் சிறுநீரகச் செயலிழப்பு சிகிச்சை பெறும் (டயாலிசிஸ்) நோயாளிகளுக்கு பால், முட்டை மற்றும் கொண்டைக் கடலை உள்ளிட்டப் புரதச் சத்து நிறைந்த உணவை வழங்குவதற்காக ஒரு சிறப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியக் கடலோர காவல்படைக்காக வேண்டி (ICG) கோவா ஷிப்யார்ட் லிமிடெட் (GSL) நிறுவனம் கட்டமைக்கும் எட்டு விரைவு ரோந்துக் கப்பல்களின் ஒரு வரிசையில் (FPV) ஒன்றான 'ஆச்சல்' என்னும் ஐந்தாவது விரைவு ரோந்துக் கப்பலானது (FPV) சமீபத்தில் அறிமுகப் படுத்தபட்டது.
  • ஆயுஷ் அமைச்சகமானது, புது டெல்லியில் 'யோகா கனெக்ட்' என்ற உலகளாவிய உச்சி மாநாட்டை “Yoga for One Earth, One Health” என்ற கருத்துருவில் நடத்தியது .
  • இஸ்ரேலிய-அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்து நிகழும் என்ற அச்சத்தில் ஈரானில் இருந்து இந்தியக் குடிமக்களை வெளியேற்றுவதற்காக இந்தியா 'ஆபரேஷன் சிந்து' எனும் நடவடிக்கையினைத் தொடங்கியுள்ளது.
  • 2024-25 ஆம் நிதியாண்டில் ஒட்டு மொத்த எண்ணிமக் கட்டணச் செயல்திறனுக்கான வெற்றியாளர்களில் ஒன்றாக சிட்டி யூனியன் வங்கி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் மிகவும் பிரபல சமையல் கலை விருதுகளில் ஒன்றான ஜேம்ஸ் பியர்ட் விருதுகள் விழாவில், ‘செம’ உணவகத்தின் சமையல் கலை வல்லுநரான விஜய் குமாருக்கு நியூயார்க் மாகாணத்தின் சிறந்த சமையல் கலை வல்லுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேசச் சுற்றுலாத் தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 18 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்