கோவா கப்பல் கட்டும் நிறுவனம் லிமிடெட் (GSL) தயாரித்த எட்டுக் கப்பல்களின் வரிசையில் ‘ஆதம்யா’ என்ற முதலாவது விரைவு ரோந்துக் கப்பலினை (FPV) இந்தியக் கடலோரக் காவல்படையில் (ICG) இணைத்துள்ளது.
APEDA (வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்) ஆனது, இந்தியாவின் முதல் ஒரு டன் எடையிலான ரோஜா வாசனை கொண்ட லிச்சிப் பழங்கள் தொகுப்பினைப் பஞ்சாபின் பதான்கோட்டில் இருந்து தோஹாவிற்கு (கத்தார்) அனுப்பியுள்ளது.
பிரக்ஞானந்தா தாஷ்கண்டில் (உஸ்பெகிஸ்தான்) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு உஸ் செஸ் கோப்பை மாஸ்டர்ஸ் போட்டியில் வென்று உலக அளவில் 4வது இடத்தையும் இந்தியாவின் மிக உயர்ந்தத் தரவரிசையில் உள்ள சதுரங்க வீரராகவும் ஆனார்.
வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஆனது, மூன்றாம் தரப்பு நாடுகள் வழியாக, முக்கியமாக துபாய், ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பாகிஸ்தான் நாட்டில் உற்பத்தி ஆகும் பொருட்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்வதைத் தடுப்பதற்காக “டீப் மேனிஃபெஸ்ட் நடவடிக்கையினை” தொடங்கியது.
கேரளாவில் 2022 ஆம் ஆண்டில் 5,315 பாதிப்புகள் மற்றும் 290 உயிரிழப்புகளாக இருந்த எலிக்காய்ச்சல் (லெப்டோஸ்பிரோசிஸ்) பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஆனது 2024 ஆம் ஆண்டில் 5,980 பாதிப்புகள் மற்றும் 394 உயிரிழப்புகளாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2025 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் தேதி வரையில் 1,451 பாதிப்புகள் மற்றும் 74 உயிர் இழப்புகள் பதிவாகியுள்ளன.
ராஜஸ்தான் ரந்தம்போர் அருகே அமைந்துள்ள டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் 12 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியில் இந்தியா தனது முதல் விலங்குகளுக்கான மேம் பால வழித் தடத்தினைத் தொடங்கியுள்ளது.
இதில் ஐந்து வனவிலங்கு மேம்பாலங்களைக் கொண்டும், விலங்குகளின் மிகவும் பாதுகாப்பான நடமாட்டத்திற்கான நாட்டின் மிக நீளமானச் சுரங்கப்பாதையைக் கொண்டுள்ளது.