இந்தியத் தலைமைப் பதிவு அலுவலகம் ஆனது, அனைத்து மாநிலங்களையும் பதிவு செய்த 7 நாட்களுக்குள், குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் இருந்து புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகள் வெளியேற்றப் படுவதற்கு முன்னதாக அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு கோரியுள்ளது.
மருத்துவமனைப் பிரசவங்கள் மூலமான சுமார் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பிறப்புகளை அரசு மருத்துவமனைகள் கையாளுகின்றன.
பல ஆண்டுகளாக கொடிய மோதல்கள் மற்றும் கடும் இடப்பெயர்ச்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு ஆகியவை அமெரிக்காவின் இடையீட்டினால் மேற்கொள்ளப் பட்ட ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தமானது, அந்தப் பிராந்தியத்தின் கனிம வளங்களை மதிப்பு மிக்க முறையில் அணுக அமெரிக்காவிற்கு உதவுகிறது.