செனகலில் மிகப் புதுமையான நிலையான செறிநிலை வேளாண்மையானது உணவுப் பாதுகாப்பையும் நில வளங்காப்பினையும் அதிகரித்துள்ளது என்பதை சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IFPRI - International Food Policy Research Institute) ஒரு புதிய ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
நீடித்த நிலைத் தன்மை, சுற்றுலா மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தச் செய்வதற்காக பாட்னா அதன் நீர் வழி மெட்ரோ சேவையினைத் தொடங்க உள்ளது.
காஷ்மீர்ரில் உள்ள பசந்த்கரில், இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல் துறை ஆகியவை நன்கு இணைந்து மேற்கொண்ட பிஹாலி நடவடிக்கை என்ற ஒரு கூட்டு நடவடிக்கையில் ஒரு தீவிரவாதியைத் தாக்கியுள்ளன.
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனமானது, 15,539.9 மெகாவாட் செயல்பாட்டுத் திறனை எட்டியதன் மூலம் 15 GW செயல்பாட்டு திறனைத் தாண்டிய முதல் இந்தியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமாக மாறியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா மாவட்டம், சிராலாவின் குப்படம் பட்டுப் புடவைகள் ஆனது மத்திய அரசின் "ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு" (ODOP) முன்னெடுப்பின் கீழ் தேசிய விருதை வென்றுள்ளன.
நமது வாழ்வில் காப்பீடு வகிக்கும் முக்கியப் பங்கை மிகவும் நினைவூட்டும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 28 ஆம் தேதியன்று தேசியக் காப்பீட்டு விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
சென்னையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஹாக்கி இந்தியா மாஸ்டர்ஸ் கோப்பைப் போட்டியில் ஒடிசா ஹாக்கி சங்கம் (மகளிர்) மற்றும் தமிழ்நாடு ஹாக்கி பிரிவு (ஆடவர்) சாம்பியன் பட்டங்களை வென்றன.
இந்த அணிகளானது, முறையே ஹாக்கி பஞ்சாப் (மகளிர்) மற்றும் ஹாக்கி மகாராஷ்டிரா (ஆடவர்) அணிகள் ஆகியவற்றினை வீழ்த்தி வரலாறு படைத்தது.
தமிழ்நாட்டில் முதல் முறையாக, சென்னைக்கு 120 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் வழங்கப் பட்டுள்ளன.
இந்தத் திட்டமானது, உலக வங்கி மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் பெரு ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் சென்னை நகரக் கூட்டாண்மை மற்றும் நிலையான நகர்ப்புறச் சேவைகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த ஆண்டின் தேசிய மின் பாதுகாப்பு வாரமானது ஜூன் 26 முதல் ஜூலை 02 ஆம் தேதி வரை அனுசரிக்கப்பட்டது என்பதோடு மேலும் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதியன்று தேசிய மின் பாதுகாப்பு தினமும் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Smart Energy, Safe Nation" என்பதாகும்.