வில்மிங்டன் பிரகடனத்தின் கீழ் இந்திய-பசிபிக் பகுதியில் கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முதன்முதலில் இணைந்து 'கடல் பாதுகாப்பு குறித்து குவாட் நாடுகள்' என்ற திட்டத்தினைத் தொடங்கியுள்ளன.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் தயாரிக்கப்பட உள்ள அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் ABS என்ற (Anti-lock Braking System) என்ற சக்கர சுழற்சியைக் கட்டுப்படுத்தாத வாகன நிறுத்த அமைப்பு பொறுத்துவதைக் கட்டாயமாக்கும் ஒரு விதிமுறையைச் சேர்ப்பதற்கான திருத்த வரைவு அறிவிப்பை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் அனல் மின் நிலையங்கள் ஆனது அனல் மின் துறையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு வழங்கிய சிறந்தப் பங்களிப்புகளுக்காக 2025 ஆம் ஆண்டிற்கான சிறப்பு சுற்றுச்சூழல் தங்க விருதைப் பெற்றன.
லடாக் ஆனது சுற்றுலாத் துறை மற்றும் இந்திய வானியற்பியல் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அதன் முதல் வானியற்பியல் சுற்றுலா விழாவை லேவில் நடத்தி வருகிறது.
சென்னை மற்றும் ஒன்பது மாவட்டங்களில் மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு (PwDs) பொது விநியோக முறையின் (PDS) கீழ் அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறை தொடங்கியுள்ளது.
சென்னை தரமணியில் ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (RMRL) அமைக்கும் தமிழ் அறிவு வளாகம் (TKC) கட்டுமானத்திற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் நாட்டினார்.
தமிழ்நாட்டின் விருதுநகரில் அடுத்த தலைமுறை PM MITRA ஜவுளிப் பூங்காவை நிறுவச் செய்வதற்கு மத்திய அரசு ₹1,900 கோடியை ஒதுக்கியுள்ளது.
2027 ஆம் ஆண்டுக்குள் 4 மில்லியன் வீடுகளில் மேற்கூரை சூரிய மின்சக்தி உற்பத்தி அமைப்புகளை நிறுவச் செய்வதற்கான புதிய திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி (SBI) வெளியிட்டுள்ளது.
ஸ்ரீ நானக் நிவாஸ் எனப்படும் மரத்திலான இந்தியாவின் முதல் குருத்வாராவானது (வழிபாட்டுத் தலம்) பஞ்சாபின் ஃபாசில்காவில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
பின்லாந்து தியோதர் மரத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட இது SSP பூபிந்தர் சிங் சித்துவால் வடிவமைக்கப் பட்டது.