இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் K.M. காதர் மொஹிதீன் தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தில் நடைபெற்ற 24வது வருடாந்திர சர்வதேச மனநல மாநாட்டில், WHO தென் கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநரான சைமா வாஸெட் என்பவர், 2025 ஆம் ஆண்டுக்கான மனநல விருது (Mental Health Award 2025) வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1135.6 திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்ட எட்டாவது ரேடாருக்குப் புலப்படாத போர்க் கப்பல் மற்றும் இரண்டாவது துஷில்-ரக கப்பலான INS தமால் ரசியாவின் கலினின் கிராட்டில் படையில் இணைக்கப்பட்டது.
பஞ்சாபைச் சேர்ந்த ஆறு வயதான தேக்பீர் சிங், எல்ப்ரஸ் மலையில் ஏறிய இளம் மலையேற்ற வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்தார்.
முன்னதாக, 2024 ஆம் ஆண்டில், கிளிமஞ்சாரோ மலையை ஏறிய இளம் ஆசிய வீரர் என்ற ஒரு பெருமையினைப் பெற்ற அவர் எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் அடிவார முகாமை அடைந்தார்.