ஸ்லைஸ் எனும் நிதி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமானது, ஸ்லைஸ் UPI கடன் அட்டை மற்றும் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலியில் இயங்கும் இந்தியாவின் முதல் நேரடி வங்கி கிளை மற்றும் ATM எந்திரத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமரின் மரபினை கௌரவிக்கும் வகையில் பெங்களூரு நகரப் பல்கலைக் கழகத்தினை டாக்டர் மன்மோகன் சிங் நகரப் பல்கலைக்கழகம் என மறுபெயரிடுவதற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள தேசியப் பொதுக் கூட்டுறவு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் (NIPCCD) ஆனது, சாவித்ரிபாய் புலே தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம் என மறுபெயரிடப் பட்டுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (NCB) ஆனது, MED MAX என்ற நடவடிக்கையின் கீழ், ஆசியா, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய சுமார் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கும் ஒரு போதைப் பொருள் அமைப்பினை அகற்றியது.
ஜியோ நிறுவனமானது, மொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவில் உள்ள T-Mobile எனும் தொலைத்தொடர்பு நிறுவனத்தினை முந்தியதன் மூலம், சந்தா தாரர்களின் எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய ஒரு நிலையான கம்பி வடம் சாராத இணைப்பு அணுகல் (FWA) வழங்குநராக மாறியுள்ளது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை ஆதரிப்பதற்காக, 2025 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியன்று தொடங்கவிருந்த அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான 3% எண்ணிம சேவை வரியை கனடா திரும்பப் பெற்றது.
கல்லூரி ஆசிரியர்களுக்கான வரைவு மாதிரி நடத்தை விதிகளை தமிழ்நாடு உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சமூக ஊடகங்களில் ஒளிப்படங்கள் மற்றும் இடுகைகளை உள்ளிடுவது குறித்து ஆசிரியர்களுக்கான சில குறிப்பிட்ட வழி காட்டுதல்களை உருவாக்க உதவும்.
இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த (UT) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு (ULB) தலைவர்களின் முதல் தேசிய மாநாடு என்பது அரியானாவின் குருகிராமின் மானேசரில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயக அமைப்பில் ULB அமைப்புகளின் பங்கினை வலுப்படுத்துவதையும் உள்ளாட்சி நிர்வாகத்தில் அவற்றின் முக்கியப் பங்கை ஆதரிப்பதையும் இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
"குடும்ப தத்தெடுப்பு திட்டத்தின்" கீழ் காசநோய் (TB) பரிசோதனையை உள்ளடக்கிய முதல் பிரதேசமாக புதுச்சேரி மாறியுள்ளது.
இந்த முன்னெடுப்பின் கீழ், மருத்துவ மாணவர்கள் வழக்கமான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புக்காக என குடும்பங்களைத் தத்தெடுத்து அவர்களின் மருத்துவ நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர்.