TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 8 , 2025 15 hrs 0 min 21 0
  • இந்தியப் பிரதமருக்கு 'தி ஆர்டர் ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் டிரினிடாட் அண்ட் டொபாகோ' என்ற அந்த நாட்டின் மிக உயரியக் குடிமகன் விருதானது வழங்கப்பட்டு ள்ளது.
  • இந்திய எஃகு ஆணையக் கழகமானது (SAIL), துபாயில் தனது முதல் வெளிநாட்டு அலுவலகத்தினை அதிகாரப்பூர்வமாகத் திறந்துள்ளது.
  • மைக்ரோமேக்ஸ் மற்றும் ஃபிசன் ஆகியவற்றின் கூட்டு துணிகர முயற்சியான MiPhi செமிகண்டக்டர்ஸ் நிறுவனமானது, இந்தியாவின் முதலாவது உள்நாட்டிலேயே நன்கு வடிவமைக்கப் பட்டு தற்போது தயாரிக்கப்பட்ட நிறுவன தரத்திலான ஒருங்கிணைந்த சுற்றமைப்பு கொண்டச் சேமிப்பகங்களை (Solid State Drives-SSD) அறிமுகப் படுத்தி உள்ளது.
  • ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கத்தினைச் சட்டப்பூர்வ அதிகார அமைப்பாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது.
  • சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க முகமையின் (USAID) நிதியுதவி நிறுத்தப்பட்ட பின்னர், ஐதராபாத்தில் உள்ள திருநர்கள் முன்னெடுத்து நடத்தும் இந்தியாவின் முதல் சுகாதார மருத்துவமனை, டாடா அறக்கட்டளையின் புதிய நிதியுதவியுடன் சப்ராங் கிளினிக் என்ற பெயரில் மீண்டும் திறக்கப்பட்டது.
  • தெலுங்கானா மாநில அரசானது ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையுடன் (JICA) இணைந்து, செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பிற்கான தெலுங்கானாத் தரவுப் பரிமாற்றம் (TGDeX) எனப்படுகின்ற இந்தியாவின் முதலாவது அரசு தலைமையிலான எண்ணிமப் பொது உள்கட்டமைப்பினை (DPI) தொடங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்