TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 9 , 2025 6 days 45 0
  • வேதியியல் ஆயுதங்களைத் தடை செய்வதற்கான அமைப்பானது (OPCW) இந்தியாவின் தேசிய இரசாயன ஆயுத உடன்படிக்கை ஆணையத்துடன் (NACWC) இணைந்து, ஆசியாவில் உள்ள பங்குதார நாடுகளின் தேசிய அதிகாரிகளின் 23வது பிராந்தியக் கூட்டத்தினை புது டெல்லியில் உள்ள வாணிஜ்யா பவனில் கூட்டியது.
  • குரோஷியாவின் ஜாக்ரெப்பில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு கிராண்ட் செஸ் டூர் போட்டியின் ரேபிட் பிரிவில் இந்திய சதுரங்க வீரர் D. குகேஷ் பட்டம் வென்றார்.
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கடன் வழங்கும் நிறுவனமான மஷ்ரெக் ஆனது, குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்தில் சர்வதேச நிதிச் சேவைகள் மைய வங்கிப் பிரிவை அமைத்த முதல் ஐக்கிய அரபு அமீரக வங்கியாக மாற உள்ளது.
  • இந்தியக் கடற்படையின், கடற்படை விமானப் பிரிவின் போர்ப் பிரிவில் சேர்க்கப்பட்ட முதல் பெண்மணியாக துணைப் படைத் தலைவர் ஆஸ்தா பூனியா வரலாறு படைத்து உள்ளார்.
  • இந்தியா உத்தரப் பிரதேசத்தின் மீரட்டின் இராணுவ ரீமௌண்ட் கால்நடைப் படையில் குதிரையின நோய் இல்லாத தனது முதல் காப்புப் பகுதியினை (EDFC) அமைத்தது.
    • உலக விலங்கு சுகாதார அமைப்பு (WOAH) ஆனது, இந்திய விளையாட்டு துறையில் பயன்படுத்தப்படும் குதிரைகளின் உலகளாவிய பங்கேற்பை நன்கு அதிகரிக்கும் வகையில், இந்த வசதியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
  • ஒடிசா மாநிலத்தின் பூரி நகரமானது பகவான் ஜெகந்நாதர் மற்றும் சக தெய்வங்கள் ஆலயம் திரும்பும் பயணமான பஹுதா யாத்திரைக்கு தயாராகி வருகிறது.
    • பஹுதா யாத்திரை என்பது கண்டிச்சா கோயிலிலிருந்து ஸ்ரீ ஜெகந்நாதர் தனது கோயிலுக்குத் திரும்பும் புனித பயணத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்