திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமனின் சிலை நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பல இந்திய மொழிகளுக்கான ஆதரவுடன், உரை உள்ளீடுகளிலிருந்து ஒலி, ஒளிப்படக் காட்சி மற்றும் இயங்குபட உள்ளடக்கத்தை தானியங்கி முறையில் உருவாக்கச் செய்வதற்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, விரிவுப்படுத்தக் கூடிய தீர்வுகளை உருவாக்குவதற்காக, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஆனது, "கலா சேது - பாரதத்திற்கான நிகழ்நேரத்தில் மொழித் தொழில்நுட்பம்" என்ற சவாலைத் தொடங்கி யுள்ளது.
இந்தியக் கடற்படையானது அதன் முதலாவது உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஆழ்கடலுக்கான ஆய்வு உதவிகரக் கப்பலான (DSV), INS நிஸ்டாரை இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.
ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களை முந்தி 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மூலதனத்தினை எட்டிய முதலாவது அமெரிக்க நிறுவனமாக என்விடியா (Nvidia) மாறியுள்ளது.
குஜராத்தின் வடோதரா மாவட்டத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டமைக்கப்பட்ட 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா பாலமானது இடிந்து விழுந்தது.
1985 ஆம் ஆண்டில், கம்பீரா பாலம் ஆனது சுமார் 100 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக கட்டப்பட்டது.