சென்னையின் ஆ ரா ஹரிகிருஷ்ணன் சமீபத்தில் பிரான்சின் லா பிளேன் என்ற ஒரு இடத்தில் நடைபெற்ற சர்வதேச செஸ் திருவிழாவில் இந்தியாவின் 87வது கிராண்ட் மாஸ்டராக ஆனார்.
கலாச்சாரத் துறை அமைச்சகமானது, 'Reclaiming India’s Knowledge Legacy Through Manuscript Heritage' என்ற தலைப்பில் இந்தியாவின் முதல் உலகளாவிய கையெழுத்துப் பிரதி பாரம்பரிய மாநாட்டை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்திய விமானப்படை ஆகியவை Su-30 Mk-I போர் விமானத்திலிருந்து காட்சிப்புல வரம்பிற்கு அப்பாற்பட்ட வானிலிருந்த படியே வானில் உள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய அஸ்த்ரா (BVRAAM) எறிகணையின் வெற்றிகரமான ஏவுதல் சோதனையை நடத்தியது.