TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 20 , 2025 16 hrs 0 min 25 0
  • மண்டோவி ஆற்றின் குறுக்கே சோராவ்-ரிபந்தர் பாதையில், கங்கோத்ரி மற்றும் துவாரகா ஆகிய இரண்டு புதிய படகுகளுடன் இந்தியாவின் முதல் Roll on-Roll off வகை இழுவைப் (RoRo) படகு சேவையை கோவா அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் அதன் முதல் புல்லட் இரயில் வழித்தடத்திற்கான ஜப்பானின் சமீபத்திய E10 தொடர் ஷின்கான்சென் இரயில்களை வாங்க உள்ளது.
    • ஷாங்காய் மாக்லேவ் ஆனது உலகின் முதல் வணிக அதிவேக காந்த இழுவை (மேக்லேவ்) இரயில் ஆகும் என்பதோடு இது மணிக்கு 300 கிலோ மீட்டர் (186 மைல்) வேகம வரை செல்லக் கூடியது.
  • எச்.ஐ.வி பாதிப்பு தடுப்பிற்கான புதிய பாதிப்புத் தடுப்பு (PrEP) விருப்பத் தேர்வாக, ஊசி மூலம் செலுத்தக்கூடிய லெனகாபாவிர் (LEN) தடுப்பு மருந்தினை ஆண்டிற்கு இரண்டு முறை செலுத்த WHO பரிந்துரைத்துள்ளது.
    • இந்த முக்கிய வழிகாட்டுதலானது ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற 13வது சர்வதேச எய்ட்ஸ் சங்கத்தின் (IAS) எச்.ஐ.வி அறிவியல் மாநாட்டில் அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்