TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 30 , 2025 16 hrs 0 min 19 0
  • இந்திய இராணுவம் மற்றும் சிங்கப்பூர் ஆயுதப்படைகள் இணைந்து இராஜஸ்தானின் பாலைவனத்தில் 'போல்ட் குருசேத்ரா 2025' என்ற கூட்டுப் பயிற்சியைத் தொடங்கின.
  • விண்வெளி அறிவியலுக்கு அளித்த மிகச் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, இஸ்ரோவின் தலைவர் V. நாராயணனுக்கு G. பிர்லா நினைவு விருதினை G.பிர்லா தொல்பொருள், வானியல் மற்றும் அறிவியல் நிறுவனம் வழங்கியுள்ளது.
  • சர்வதேசப் புக்கர் பரிசு பெற்ற இந்தி மொழி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீயின் 'Once Elephants Lived Here' என்ற புதினத்திற்கு 2025 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க PEN மொழி பெயர்ப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் (IGNOU) துணை வேந்தராக உமா காஞ்சிலால் நியமிக்கப் பட்டுள்ளதையடுத்து, 1985 ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதிலிருந்து இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 28 ஆம் தேதி உலக இயற்கை வளங்காப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது, இது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உலகளாவிய அளவில் நினைவூட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்