உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோவிலில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
மங்களூருவைச் சேர்ந்த ரெமோனா எவெட் பெரேரா என்ற மாணவி, 170 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியதன் மூலம் தனது பெயரை உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறச் செய்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியாவின் திவ்யான்ஷி பௌமிக், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற 29வது ஆசிய இளையோர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 15 வயதிற்கு உட்பட்ட மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் பட்டத்தை வென்று வரலாறு ஒன்றைப் படைத்தார்.
ஏப்ரல் 22 ஆம் தேதியன்று நடைபெற்ற பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகள் மகாதேவ் நடவடிக்கை என்ற பெயரில் பாதுகாப்புப் படையினரால் ஜம்மு-காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் முதல் முயற்சியாக, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் இந்தி மொழியில் கற்பிக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட உள்ளது.
12 இலத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டணியானது, Latam-GPT எனப்படும் அந்தப் பிராந்தியத்தின் முதல் பெரிய செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியினை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிட உள்ளது.
இந்திய இராணுவமானது சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு சியாங் மாவட்டத்தில் ட்ரோன் பிரஹார் எனும் பயிற்சியினை நடத்தியது.
சீனாவின் யான்டாய் நகரில் உள்ள யான்டாய் பெங்லாய் சர்வதேச விமான நிலையம் (முனையம் 2) ஆனது 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் 6 மிக அழகான விமான நிலையங்களில் முதல் இடத்தைப் பிடித்தது.
இராணுவ மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை (AHRR) அமைப்பானது, புது டெல்லியில் SHAPE 2025 (நிலையான மருத்துவமனை கட்டிடக்கலை, திட்டமிடல், உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்கள்) எனப்படும் முதல் ஆயுதப்படை தேசிய மாநாட்டை நடத்தியது.