இந்திய இராணுவமானது கிழக்கு சிக்கிமில், உயரமான சூழ்நிலைகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான போர்க்கள விழிப்புணர்வு மற்றும் அடுத்த தலைமுறை போர்த் தொழில்நுட்பங்களைப் பரிசோதிப்பதற்காக திவ்ய திருஷ்டி பயிற்சியினை நடத்தியது.
ஷைனிங் ஹோப் ஃபார் கம்யூனிட்டீஸ் (SHOFCO) நிறுவனர் டாக்டர் கென்னடி ஒடேட், கென்யாவில் உள்ள சமூகங்களுக்குத் தாக்கம் மிக்க சேவையினை வழங்கியதற்காக 2025 ஆம் ஆண்டு UN நெல்சன் மண்டேலா பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தில் உள்ள இரகசிய சேவை சார் புத்தொழில் நிறுவனமான ஸ்டார்டோர், லூகாஸ் எனப்படும் அதன் அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான சுற்றுப்பாதையில் கலங்களைப் பரிமாற்றுவதற்கான வாகனத்தினை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் உள்ளக ஹைட்ரஜன்-ஆக்ஸிஜன் உந்துவிசை இயந்திரத்தினை வெற்றிகரமாக சோதித்தது.
இந்திய இரயில்வே நிர்வாகமானது, ஜம்முவில் உள்ள தினாநகர் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாஜ்பூர் உட்பட மூன்று நிலையங்களில் புதிய மின்னணு அடிப்படையிலான நேரடி இயக்க ஒருங்கிணைந்த நிறுத்த (DDEI) அமைப்பை வெற்றி கரமாகப் பரிசோதனை செய்துள்ளது.
சீன நாடானது, 2025 ஆம் ஆண்டு தொடங்கி, 3 வயதிற்குட்பட்ட ஒவ்வொரு குழந்தையின் பெற்றோருக்கு ஆண்டிற்கு 3,600 யுவான் (சுமார் 500 டாலர்) வழங்கும் புதிய மானியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
10 செ.மீ வரை உயரமுள்ள பார்படோஸ் நூல் பாம்பு (டெட்ராச்சிலோஸ்டோமா கார்லே), 2006 ஆம் ஆண்டிலிருந்து தென்படாத நிலையில் 2025 ஆம் ஆண்டில் மீண்டும் கண்டறியப் பட்டுள்ளது.
கண் பார்வையற்ற இது நிலத்தடியில் வாழ்கின்ற எறும்புகள் மற்றும் கரையான்களை உண்ணுகின்ற இனமாகும்.