TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 3 , 2025 16 hrs 0 min 7 0
  • கோவா கப்பல் கட்டும் நிறுவனமானது, இந்தியக் கடலோர காவல்படைக்காக என்று உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட எட்டு விரைவு ரோந்துக் கப்பல்களில் ஆறாவது கப்பலான “ICGS அடல்” கப்பலினை அறிமுகப்படுத்தியது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட பிரலய் என்ற ஏவுகணையின் தொடர்ச்சியான இரண்டு விமானச் சோதனைகளை ஒடிசாவின் டாக்டர் APJ அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக நடத்தியது.
  • ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்திய இராணுவத்தின் ‘சிவசக்தி நடவடிக்கை’ மூலம் இரண்டு லஷ்கர்-இ-தைபா தீவிரவாதிகள் கொல்லப் பட்டனர்.
  • பாரத ரத்னா டாக்டர் M. S. சுவாமிநாதன் அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 07 ஆம் தேதியானது ஆண்டுதோறும் “நிலையான வேளாண்மை தினமாக” கொண்டாடப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்து உள்ளது.
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது மறைந்து வரும், மாசுபட்ட மற்றும் பருவகால நதிகளைப் புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில் ஒரு விரிவான நதி புத்துயிர்ப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்