TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 9 , 2025 7 days 42 0
  • இந்தியாவின் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகமானது, BlueKraft Digital Foundation எனும் இலாப நோக்கற்ற அமைப்பினால் எழுதப்பட்ட “370: Undoing the Unjust, A New Future for J&K” என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.
  • மிதிவண்டியை/சைக்கிளை கருப்பொருளாகக் கொண்ட ஒரு தமிழ் திரைப்படமான பொன்முடி திருமலைச்சாமி இயக்கிய “BMW 1991” ஆனது, சர்வதேச திரைப்பட விழாவில் 22 விருதுகளை வென்றுள்ளது.
  • தசைக்கூட்டு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் எலும்பு மற்றும் மூட்டு கோளாறுகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 04 ஆம் தேதியன்று தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • பாதுகாப்பான மற்றும் திறம் மிக்க சாலைப் பயன்பாட்டை உறுதி செய்வதில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று சர்வதேச போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்