இந்தியாவின் பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகமானது, BlueKraft Digital Foundation எனும் இலாப நோக்கற்ற அமைப்பினால் எழுதப்பட்ட “370: Undoing the Unjust, A New Future for J&K” என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளது.
மிதிவண்டியை/சைக்கிளை கருப்பொருளாகக் கொண்ட ஒரு தமிழ் திரைப்படமான பொன்முடி திருமலைச்சாமி இயக்கிய “BMW 1991” ஆனது, சர்வதேச திரைப்பட விழாவில் 22 விருதுகளை வென்றுள்ளது.
தசைக்கூட்டு ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் எலும்பு மற்றும் மூட்டு கோளாறுகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 04 ஆம் தேதியன்று தேசிய எலும்பு மற்றும் மூட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது.
பாதுகாப்பான மற்றும் திறம் மிக்க சாலைப் பயன்பாட்டை உறுதி செய்வதில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று சர்வதேச போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.