TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 12 , 2025 17 hrs 0 min 8 0
  • போலந்தில் உள்ள சர்வதேச வைஸ்லாவ் மேனியாக் நினைவு மைதானத்தில்/அரங்கில் நடைபெற்ற மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் அன்னு இராணி 62.59 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • உத்தரப் பிரதேசத்தின் கஞ்ச்வாஜாவிலிருந்து ஜார்க்கண்டில் உள்ள கார்வா வரையிலான தொலைவிற்கு, 'ருத்ராஸ்திரா' எனும் 4.5 கிலோ மீட்டர் நீளமுள்ள ஆசியாவின் மிக நீளமான சரக்கு இரயிலினை இந்திய இரயில்வே நிர்வாகம் வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
  • பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) திட்டத்தின் கீழ், அத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து (01.01.2017) 31.07.2025 ஆம் தேதி வரை 4.05 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு மகப்பேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை கௌரவிக்கும் வகையில் ஆகஸ்ட் 07 ஆம் தேதியானது, இந்தியாவில் தேசிய ஈட்டி எறிதல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்