11 டன் அளவிலான ஆப்பிள்கள் மற்றும் பேரிக்காய்கள் புனே வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவை (APMC) அடைந்ததையடுத்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் மகாராஷ்டிரா ஆகியவை eNAM வழியாக அவற்றின் முதலாவது மாநிலங்களுக்கு இடையேயான வேளாண் வர்த்தகத்தினை நிறைவு செய்தன.
‘Why the Constitution Matters’ என்ற புத்தகத்தினை முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி (CJI) தனஞ்சய Y. சந்திரசூட் எழுதியுள்ளார்.
DSP மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமானது, இந்தியாவின் முதல் ஃப்ளெக்ஸி கேப் குறியீட்டு நிதியான DSP Nifty500 ஃப்ளெக்ஸி கேப் தரம் 30 என்ற குறியீட்டு நிதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தைக் கௌரவிக்கும் வகையில், விஸ்வ-சமஸ்கிருத-தினம் என்றும் அழைக்கப்படும் உலக சமஸ்கிருத தினமானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
ஆதார் முக அங்கீகாரம் ஆனது 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் சாதனை அளவாக 19.36 கோடி பரிவர்த்தனைகளை எட்டியது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின்படி, 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பதிவான 5.77 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்து இது மூன்று மடங்கு உயர்வைக் குறிக்கிறது.