இந்தியாவின் ஒரே மற்றும் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த துத்தநாக உற்பத்தி நிறுவனமான இந்துஸ்தான் துத்தநாக லிமிடெட், சர்வதேச சுரங்க மற்றும் உலோக சபையில் இணைந்த முதல் இந்திய நிறுவனமாகும்.
DPIIT மற்றும் Zepto ஆகியவை Zepto Nova எனப்படும் 6 மாத காலத் திட்டத்தின் மூலம் ஆரம்ப கட்ட உற்பத்திப் புத்தொழில் நிறுவனங்களை ஆதரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த முன்னெடுப்பானது வன்பொருள், இணைய உலகம் (IoT), சரக்குப் பொதிகள் மற்றும் வழிகாட்டுதலுடன் கூடிய நிலையான உற்பத்தி, இந்தியாவின் புத்தொழில்களுக்கான ஆதரவு மற்றும் 100க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களுக்கான சந்தை அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.