TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 20 , 2025 17 hrs 0 min 9 0
  • இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு கடற்படைப் பயிற்சியான SLINEX-25 என்பது இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற்றதோடு இதில் கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதற்காக INS ராணா மற்றும் INS ஜோதி ஆகிய கப்பல்கள் பங்கேற்றன.
  • முந்தைய ஆண்டில் 1.27 லட்சம் கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தியானது 18% வளர்ச்சியடைந்து 2024-25 ஆம் நிதியாண்டில் சாதனை அளவாக 1.51 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
  • பெருந்தொற்று காலத்தில் வாங்கப்பட்ட கடன் காரணமாக அமெரிக்க தேசியக் கடன் 2030 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளை விட 37 டிரில்லியன் டாலர் மதிப்பினை எட்டியது.
  • ரியல் மாட்ரிட் கால்பந்து அணிக் குழுவின் நிறுவன மதிப்பு 14% உயர்ந்து 1.9 பில்லியன் யூரோவாகவும், பார்சிலோனா அணிக் குழுவின் நிறுவன மதிப்பு 11% அதிகரித்து 1.7 பில்லியன் யூரோவாகவும் உள்ளது.
    • இரண்டு அணிக் குழுக்களும் AAA+ நிறுவன வலிமை மதிப்பீடுகளைப் பெற்றன மற்றும் முறையே 6 பில்லியன் யூரோ மற்றும் 4.4 பில்லியன் யூரோ என்ற உயர்ந்த நிறுவன மதிப்புகளைக் கொண்டுள்ளன.
  • 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் முன்னெடுப்பினை இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
    • புது டெல்லி அரசானது, இதற்கு முன்னதாக இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தியதன் 20 ஆம் ஆண்டு  நிறைவைக் குறிக்கும் வகையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்றான காலக்கெடுவிற்கு முன்னதாக இந்தியாவானது தனது இறுதி முன் மொழிவைச் சமர்ப்பிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்