நீரஜ் கய்வானின் "Homebound" திரைப்படம் 2025 ஆம் ஆண்டு மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றது.
கொல்கத்தாவின் GRSE நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்ட நான்கு ஆய்வுக் (பெரிய) கப்பல்களில் மூன்றாவது கப்பலான இக்சக் (யார்டு 3027) இந்தியக் கடற்படையிடம் வழங்கப்பட்டது.
முதல் இரண்டு கப்பல்களான INS சந்தயக் மற்றும் INS நிர்தேசக் ஆகியவை 2024 ஆம் ஆண்டில் படையில் இணைக்கப்பட்டன.
அமைச்சர் H.D. குமாரசாமி பாரத் ஸ்டீல் மாநாட்டின் முத்திரைச் சின்னம், வலைத்தளம் மற்றும் சிற்றேட்டைப் புது டெல்லியில் வெளியிட்டார்.
பாரத் ஸ்டீல் என்பது எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதன்மையான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி ஆகும்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் குரூப் B மற்றும் C பணியாளர்களின் முதல் படைப் பிரிவு மதிப்பாய்வை அரசாங்கம் அங்கீகரித்தன் மூலம் 23,710 உடனடிப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.
சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு 8,000க்கும் மேற்பட்ட பதவி உயர்வு ஆணைகள் வழங்கப் பட்டன.
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் கண்டுபிடிக்கப்பட்ட எஃகுப் பறை எனப்படும் ஓர் இசைக் கருவியைக் கொண்டாடும் வகையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று உலக எஃகுப் பறை தினம் கொண்டாடப்படுகிறது.