இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமானது, அதன் அரியானா மாநில பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நிலையான விமான எரிபொருள் (SAF) உற்பத்திக்கான CORSIA திட்டத்தின் கீழ் சர்வதேச நிலைத்தன்மை மற்றும் கார்பன் சான்றிதழ் (ISCC) பெற்ற முதல் இந்திய நிறுவனமாக மாறியது.
ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், 2025 ஆம் ஆண்டு குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் பட்டத்தினை வென்று, முதல் தனிநபர் சாம்பியனாகவும், அவர் மேலும் உலகின் முதல் 10 நிகழ்நேர மதிப்பீடுகளிலும் இடமும் பெற்றார்.
இந்தியாவின் 79வது சுதந்திரத் தினத்தன்று சியாட்டிலின் ஸ்பேஸ் நீடில் எனும் 605 அடி உயரத்திலான கட்டிடத்தின் உச்சியில் முதன்முறையாக இந்திய மூவர்ணக் கொடி ஏற்றப் பட்டதுடன் அந்த இடத்தில் முதன்முறையாக ஏற்றப்பட்ட முதல் வெளிநாட்டுக் கொடியாகவும் மாறியது.
இராஜஸ்தானின் மணிகா விஸ்வகர்மா 2025 ஆம் ஆண்டிற்கான பிரபஞ்ச அழகி - இந்தியப் பட்டத்தினை வென்றார்.
ஃபாக்ஸ்கான் நிறுவனமானது, கர்நாடகாவின் பெங்களூருக்கு அருகிலுள்ள அதன் தேவனஹள்ளி மையத்தில் ஐபோன் 17 ரக கைபேசிகளின் உற்பத்தியைத் தொடங்கி உள்ளது.
இந்த உற்பத்தி அலகு ஆனது, சீனாவிற்கு வெளியே வேறொரு நாட்டில் 2.8 பில்லியன் டாலர் (25,000 கோடி ரூபாய்) முதலீட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் நிறுவிய இரண்டாவது பெரிய உற்பத்தி அலகு ஆகும்.
குக்கா நௌமி என்பது இராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஜம்மு & காஷ்மீர் மற்றும் உத்தரப் பிரதேசம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு நாட்டுப்புறச் சமய விழாவாகும்.
இது பத்ரபாத மாதத்தில் கிருஷ்ண பக்சத்தின் ஒன்பதாம் நாளில், பொதுவாக ஜன்மாஷ்டமிக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது.