TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 23 , 2025 2 days 21 0
  • NTPC லிமிடெட் நிறுவனம் ஆனது, மின்சாரத் துறையில் ISO 22301:2019 தரத்திற்கு இணக்கமான வணிக தொடர்ச்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்ட முதல் பொதுத்துறை நிறுவனமாக மாறியது.
  • ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் தனது முதல் இரயிலை ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனேபட் பாதையில் இந்தியா அறிமுகப்படுத்துகிறது.
  • இந்திய இராணுவத்தின் சாத்பவனா நடவடிக்கையின் கீழ், அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ள டா ஜோங்கில் 'ஆரோக்கியம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம்' திறக்கப்பட்டுள்ளது.
  • டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள், அந்நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தின் (AGM) போது நோயல் N டாடாவை அதன் இயக்குநராக நியமிப்பதற்கு ஒரு மனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
  • இந்தியா 2025 ஆம் ஆண்டு ஆசிய ஓபன் குறுகிய தூரப் பாதையிலான வேகப் பனிச்சறுக்கு கோப்பை போட்டியை உத்தரகாண்டின் டேராடூனில் முதல் முறையாக நடத்த உள்ளது.
  • மலையேறும் வீரர் கபக் யானோ ரஷ்யா மற்றும் ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமான எல்ப்ரஸ் மலையை வெற்றிகரமாக ஏறினார்.
  • சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, இரண்டு ஆண்டுகளுக்கு கர்னாலி மற்றும் சுதுர்பாசிமில் உள்ள 97 சிகரங்களில், 5,970 முதல் 7,132 மீட்டர் வரையிலான பகுதிகளுக்கு இலவசமாக மலையேறுவதற்கு நேபாளம் அனுமதி வழங்குகிறது.
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை, தற்போதைய அவரது பணிகளுடன் சேர்ந்து நாகாலாந்து ஆளுநராகவும் நியமித்து உள்ளார்.
  • வாரணாசியில் உள்ள பனாரஸ் (இரயில் பெட்டித் தொழிற்சாலை) லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனத்தில் உள்ள தண்டவாளங்களுக்கு இடையில் இந்தியாவில் முதல் முறையாக அகற்றக் கூடிய வகையிலான 70 மீட்டர் நீளத்தில் சூரியசக்தி மின் உற்பத்தித் தகடுகள் அமைப்பை இந்திய இரயில்வே நிர்வாகம் நிறுவி இயக்கியுள்ளது.
  • இந்தியாவின் முதல் நிலையான விமான எரிபொருள் (SAF) உற்பத்தி ஆலையானது ஹரியானாவில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தின் பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் வணிக உற்பத்தியைத் தொடங்க உள்ளது.
  • இராஜஸ்தானில் உள்ள கோட்டா-புண்டியில் உள்ள எவ்விதமான கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலத்தில் விமான நிலையத்தினை உருவாக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆதார் அடிப்படையிலான வாடிக்கையாளர் சரிபார்ப்புக்காக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஸ்டார்லிங் நிறுவனத்துடன் இணைந்துப் பணியாற்ற உள்ளது.
  • இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது இது வரை இல்லாத அளவிற்கு 21.89 லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்