14வது இந்தியா-தாய்லாந்து கூட்டு இராணுவப் பயிற்சி மைத்ரீ, மேகாலயாவின் உம்ரோயில் உள்ள வெளிநாட்டு பயிற்சி முனையில் நடைபெறும் என்பதோடு இது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நாட்டில் நடத்தப்படுகிறது.
2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து அரசாங்க இணையச் சந்தை (GeM) ஒட்டு மொத்த மொத்த வணிக மதிப்பில் (GMV) 15 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
மும்பையின் வான்கடே மைதானத்தில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரின் வெண்கல சிலை திறக்கப்பட்டது.
மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) ஆனது, பாலினச் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக அதன் முதல் அனைத்து மகளிர் படைப் பிரிவினைத் தொடங்கி உள்ளது.
உள்நாட்டிலேயேத் தயாரிக்கப்பட்ட, விரைந்து செயல்படும் நிலம் விட்டு வானில் உள்ள இலக்கினைத் தாக்கும் எறிகணைகள் (QRSAM) கொண்ட பல அடுக்கு வான் வழிப் பாதுகாப்பு அமைப்பான ஒருங்கிணைந்த வான் வழிப் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் (IADWS) முதல் ஏவுதல் சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெற்றிகரமாக நடத்தியது.
குஜராத்தின் அகமதாபாத்தில் 2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (CWG) நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சியை மத்திய அமைச்சரவை அங்கீகரித்தது.
கடைசியாக 2010 ஆம் ஆண்டில் இந்த விளையாட்டுகளை நடத்திய இந்தியா 2030 ஆம் ஆண்டில் இப்போட்டிகளை நடத்துவதற்காக நைஜீரியாவுடன் போட்டியிடுகிறது.