TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 31 , 2025 6 days 41 0
  • NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளிக்கு 'Top Rankers அமைப்பின் சிறப்பு விருதான ஆண்டின் சிறந்த தலைமை நிர்வாக அதிகாரி விருது' வழங்கப்பட்டுள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு FIDE உலகக் கோப்பை போட்டியானது, இந்தியாவின் கோவாவில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
  • இந்தியா தனது முதல் மூன்றாம் தலைமுறை கூட்டாண்மைத் திட்டம் (3GPP) ரேடியோ அணுகல் வலையமைப்பு (RAN) கூட்டங்களை பெங்களூருவில் நடத்தியது.
  • GMCH ஓமந்தூரார் எஸ்டேட், திருவண்ணாமலை GMCH, தேனி GMCH, கன்னியாகுமரி GMCH மற்றும் திருவள்ளூர் GMCH உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள ஐந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் (GMCH), மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வழங்குநர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்திடமிருந்து (NABH) சான்றிதழைப் பெற்றுள்ளன.
  • புதிய மேம்பாட்டு வங்கி (NDB) ஆனது டாக்டர் இராஜீவ் ரஞ்சனை அதன் துணைத் தலைவராகவும் தலைமை இடர் மேலாண்மை அதிகாரியாகவும் நியமித்துள்ளது.
  • ‘Secession of the Successful: The Flight Out of New India’ என்ற புத்தகத்தினை சஞ்சயா பாரு எழுதியுள்ளார்.
  • மிகப்பெரிய மற்றும் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பன்னாட்டு ராணுவப் பயிற்சிகளில் ஒன்றான ‘19வது பிரைட் ஸ்டார் 2025’ பயிற்சியானது எகிப்து நாட்டில் 43 நாடுகளின் பங்கேற்புடன் நடைபெறுகிறது.
  • ஆரோக்ய சேது பயிற்சியானது, அசாமில் உள்ள டூம்டூமா எனுமிடத்தில் உள்ள ருபாய் பகுதியில் இந்திய இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • இது பல்வேறு இராணுவப் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இது போன்ற முதல் வகையான குடிமை-இராணுவ மருத்துவ இணைவுப் பயிற்சியைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்