தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இலண்டனில் பாபா சாகேப் இலண்டன் பொருளியல் மற்றும் அரசியல் அறிவியல் கல்லூரியில் (LSE) பயிலும் போது தங்கியிருந்த டாக்டர் B.R. அம்பேத்கர் இல்லத்திற்கு வருகை தந்தார்.
ஏர் இந்தியா SATS விமான நிலைய சேவைகள் (AISATS) ஆனது, ICAO (சர்வதேசப் பொது விமானப் போக்குவரத்து அமைப்பு) தரநிலைகளுடன் இணைக்கப்பட்ட புதிய கட்டமைப்பின் கீழ் DGCA (பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம்) பாதுகாப்பு ஒப்புதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிலக் கட்டுப்பாட்டு மேலாண்மை நிறுவனமாக மாறியது.
ஐக்கியப் பேரரசின் லிவர்பூலில் நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டு உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு போட்டிகள் ஒன்றாக நடத்தப்படுகின்றன.
கௌஹாத்தி பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையுடன் இணைந்து, அசாம் மாநிலத்தில் உள்ள We Foundation India தலைமையிலான குழு, கழுகு வளங்காப்பில் பணிபுரியும் தனிநபர்களை ஒரு வலையமைப்பிற்குள் இணைப்பதற்கான இந்தியாவின் முதல் தளத்தினைத் தொடங்கியது.