ஜப்பானின் பிரதமர் ஷிகெரு இஷிபா, தனது லிபரல் டெமாக்ரடிக் கட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததற்குப் பிறகு, ஓராண்டிற்கும் குறைவான காலத்தில் பதவியில் இருந்த பிறகு இராஜினாமா செய்தார்.
கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) ஜானிக் சின்னரை (இத்தாலி) தோற்கடித்து 2025 ஆம் ஆண்டு அமெரிக்க டென்னிஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் பட்டத்தை வென்றார், அதே நேரத்தில் அரினா சபலென்கா (பெலாரஸ்) மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் தனது இரண்டாவது தொடர்ச்சியான சாம்பியன்ஷிப் பட்டத்தினைப் பெற்றார்.
ஜப்பானைச் சேர்ந்த கோகிச்சி அகுசாவா தனது 102வது வயதில் ஃபுஜி சிகரத்தினை அடைந்த மிக வயதான நபர் என்ற பெருமையுடன் கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
அக்டோபர் 11 முதல் 15 ஆம் தேதி வரையில் புவனேஸ்வரில் (ஒடிசா) 28வது ஆசிய அளவிலான டேபிள் டென்னிஸ் அணி சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்த உள்ளது, இதன் மூலம் ஒரு மாநிலம் ஆசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியை நடத்துவது முதல் முறையாகும்.
இந்தியாவின் ஆடவர் கூட்டு வில்வித்தை அணியானது, தென் கொரியாவின் குவாங்ஜுவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பிரான்சு அணியினை வீழ்த்தி அதன் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
11வது ஆசிய நீர் சார்ந்த விளையாட்டுகளுக்கான சாம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் முதன்முறையாக 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 11 ஆம் தேதி வரை குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய நீச்சல் கூட்டமைப்பு ஆகியவை ஜல்வீர் சின்னத்தையும் அதிகாரப்பூர்வ முத்திரையையும் புது டெல்லியில் அறிமுகப்படுத்தின.
நேபாளம் மற்றும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 01 ஆம் தேதி வரை சீனாவில் 'சாகர்மாதா நட்புறவு' என்ற கூட்டுப் பயிற்சியை நடத்த உள்ளன.