TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 13 , 2025 10 days 68 0
  • மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையத்தின் (ICID) கூட்டத்தில், சிறந்த பாரம்பரிய நீர்ப்பாசனப் பணிகளைக் கட்டமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிற்கான விருதுகளை தமிழ்நாட்டின் செய்யாறு மற்றும் கொடிவேரி அணைகள் வென்றுள்ளன.
  • இந்திய இரயில்வே நிர்வாகம் ஆனது, சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த இரயில் பெட்டித் தொழிற்சாலையில் (ICF) ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் இரயில் பெட்டியை வெற்றிகரமாக சோதித்தது.
  • பாலக்காட்டைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) யூனுஸ் அகமது, தனது வணிகத் தலைமை மற்றும் பங்களிப்புகளுக்காக துபாயில் அரேபிய உலக சாதனைகள் அமைப்பிடமிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான கேமல் சர்வதேச விருதைப் பெற்றார்.
  • தஜிகிஸ்தானில் உள்ள ஹிசோர் சென்ட்ரல் மைதானத்தில் நடைபெற்ற CAFA நாடுகள் கோப்பை 2025 போட்டியில் ஓமன் அணிக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க அதன் முதல் வெற்றியின் மூலம் இந்தியா தனது வெண்கலப் பதக்கத்தை வென்றது.
  • அமெரிக்கச் சதுரங்க வீரர் அபிமன்யு மிஸ்ரா FIDE கிராண்ட் சுவிஸ் 2025 போட்டியில் உலக சாம்பியன் D குகேஷை தோற்கடித்து வரலாறுப் படைத்தார்.
  • இந்தியக் குடியரசுத் தலைவர், புது டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையின் (EEPC) பிளாட்டினம் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்