TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 15 , 2025 7 days 50 0
  • ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான கிராண்ட் எத்தியோப்பியன் ரினயசன்ஸ் அணையை எத்தியோப்பியா அரசு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தது என்ற நிலையில் இது அதன் முழு கொள்ளளவான 5,150 மெகாவாட் திறனை எட்டியது.
  • எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர் கல்யாண் வர்மா இயக்கிய வைல்ட் தமிழ்நாடு படத்தின் முன்னோட்ட விளம்பரத்தினை (டிரெய்லர்) தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டது.
  • நேபாள ஜனாதிபதி இராம் சந்திர பௌடல், முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கியை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று நாட்டின் முதல் பெண் பிரதமராக நியமித்தார்.
  • சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) 2025 ஆம் ஆண்டு ICC மகளிர் கிரிக்கெட் உலக கோப்பைப் போட்டிக்கு முன்னதாக 'Will to Win' என்ற பிரச்சாரத் திரைப்படத்தை வெளியிட்டது.
  • ஆரக்கிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் 2025 ஆம் ஆண்டில் எலோன் மஸ்க்கை முந்தி உலகின் மிகப் பெரிய பணக்காரரானார்.
    • ஒரே நாளில் எலிசனின் நிகர சொத்து மதிப்பில் 101 பில்லியன் டாலர் வருவாயைச் சேர்த்து, அதன் மதிப்பினை 393 பில்லியன் டாலராக உயர்த்திய ஒரு சாதனை அளவிலான வருவாய் ஆனது என்பதோடு அவை ஆரக்கிள் நிறுவனத்தின் பங்குகளை உயர்த்தியது.
  • இந்தியக் கடற்படையானது, குருகிராமில் ஆரவல்லி மலைத்தொடரின் பெயரிடப்பட்ட ஐஎன்எஸ் ஆரவல்லி எனும் தளத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
    • இந்த தளம் ஆனது கடற்படையின் தகவல் மற்றும் தகவல்தொடர்பு உள் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 09 ஆம் தேதியன்று, மின்சார வாகனங்கள் (EV) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், நிலையான போக்குவரத்தை நோக்கிய உலகளாவிய மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காகவும் உலக EV தினம் அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்