TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 16 , 2025 6 days 36 0
  • பாலில் இருந்து தயாரிக்கப்படும் சுவையான மதுரை ஜிகர்தண்டாவிற்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக சென்னையில் உள்ள புவிசார் குறியீட்டுப் பதிவேட்டு அலுவலகத்தில் விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • காலை மற்றும் மாலை நேரங்களில் 25 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகமானது (MTC) சென்னையில் 25 பேருந்துகளை அறிமுகப் படுத்தி உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதியன்று ரோம் நகரில் நடைபெற்ற நான்காவது உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட ஏலத்தை இந்தியா வென்றதையடுத்து, 2027 ஆம் ஆண்டில் சென்னையில் ஐந்தாவது கடலோரக் காவல்படை உலகளாவிய உச்சி மாநாட்டை நடத்த உள்ளது.
  • 1,800க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் விளையாட்டு, தொழில்முனைவோர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மூலம் உள்ளடக்கிய தன்மையைக் கொண்டாடியதுடன் பர்பிள் ஃபெஸ்ட் 2025 நொய்டாவின் அமிட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (APEDA) முதல் பிராந்திய அலுவலகம் பீகாரின் பாட்னாவில் திறக்கப் பட்டது.
  • டெல்லி-மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RRTS) வழித்தடத்தில் இயங்கும் போது மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தை எட்டியதன் மூலம் நமோ பாரத் இந்தியாவின் அதிவேக இரயிலாக மாறியுள்ளது.
  • துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது, துபாயில் அமைக்கப் பட்டு உள்ள அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தின் முதல் சர்வதேச வளாகத்தைத் திறந்து வைத்தார்.
  • உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட இந்திய ராணுவ பாய்மரக் கப்பலான திரிவேணியில் உலகின் முதலாவது முப்படையினரால் இயக்கப் படும் 'சமுத்திரப் பிரதக்சினா' பயணத்தினை மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பாட்டிற்கு அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு மரணத்திற்குப் பின்னதாக பொருளாதாரத்திற்கான P. V. நரசிம்ம ராவ் நினைவு விருது வழங்கப்பட்டது.
  • புதைபடிவ எரிபொருள் சாராத மின்சார உற்பத்தித் திறனில் இந்தியா 250 ஜிகாவாட் அளவினை எட்டியுள்ளது.
    • 2030 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 500 ஜிகாவாட் ஆக உயர்த்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்